spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னை39 தங்கப்பதக்கம், 6,581 இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி மாணவர்கள் பட்டங்கள்… அமைச்சர் வழங்கி ...

39 தங்கப்பதக்கம், 6,581 இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி மாணவர்கள் பட்டங்கள்… அமைச்சர் வழங்கி சிறப்புரை…

-

- Advertisement -

கல்வி திராவிட சித்தாந்தத்தின் ஆணிவேராகும் சமூக நீதி சமத்துவம் அனைத்தும் அனைவருக்கும் சீரான கல்வியில் இருந்து தான் ஆரம்பிக்கிறது என சென்னை வி.ஐ.டி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினாா்.39 தங்கப்பதக்கம், 6,581 இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி  மாணவர்கள் பட்டங்கள்… அமைச்சர் வழங்கி  சிறப்புரை…சென்னை வண்டலூர் அருகே சென்னை வி.ஐ.டி பல்கலைக்கழத்தின் 13வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பட்டமளிப்பு உரையாற்றி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகினாா். இந்த பட்டமளிப்பு  விழாவில் பங்களாதேஷ் நாட்டின் சென்னை துணை தூதர் ஷெல்லி சலேஹின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்கலைக்கழகம் அளவில்  39 தங்கப்பதக்கம், 6,581 இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி  மாணவர்கள் பட்டங்கள் வழங்கப்பட்டது. அப்போது மாணவர்களிடம் பேசிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்:-

கல்வி திராவிட சித்தாந்தத்தின் ஆணிவேராகும் சமூக நீதி சமத்துவம் அனைத்தும் அனைவருக்கும் சீரான கல்வியில் இருந்து தான் ஆரம்பிக்கிறது நூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் அனைவருக்கும் கட்டாய கல்வி தரப்பட்டது. அனைவருக்கும் கல்வி என்பது அனைத்து சமூகத்தினர் அனைத்து பாலினங்கள் அனைத்து மதம் சார்ந்தவர்கள் அவர்களுக்கு தரப்படும். யார் எங்கிருந்து வந்தாலும் அவர்கள் அனைத்தும் அனைவருக்கும் கட்டாயமாக கல்வி அளிக்கப்பட வேண்டும் .தமிழ்நாட்டில் அதிவேக பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தும் முக்கியமான காரணம் பெண்களுக்கு கல்வி வழங்கி அவர்களை பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றார்கள். தமிழ்நாட்டில் மின்னணு மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்காண பெண்கள் வேலை செய்கிறார்கள். கல்வி என்பது ஒரு மனிதனை நாகரீகமாகவும் ஆக்க வேண்டும். தற்போது வேலை மற்றும் திறனை மேம்படுத்துவது மட்டுமே கல்வியாக இருக்கிறது அதை சற்று மாற்ற வேண்டும். தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சட்டம் வரலாறு இலக்கியம் போன்ற துறைகள் இருப்பது மிக முக்கியம் என்று கூறினாா்.

we-r-hiring

முன்னதாக பேசிய கல்லூரியின் வேந்தர் ஜி.விஸ்வதாநன்:-39 தங்கப்பதக்கம், 6,581 இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி  மாணவர்கள் பட்டங்கள்… அமைச்சர் வழங்கி  சிறப்புரை…இந்தியா அதிவேகப் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து தற்போது நான்காவது மிகப்பெரிய பொருளாதாரமாக உலகில் விளங்குகிறது ஆனால் தனி மனித வருமானத்தில் இந்தியா மிகவும் பின்தங்கி இருக்கிறது. இதற்கு முகம் மிக முக்கியமான காரணம் நாம் வரவு செலவில் ஜிடிபியில் கல்விக்கு மிக குறைந்த அளவே ஒதுக்குகிறோம் இந்த ஆண்டு பட்ஜெட்டில் 55 லட்சம் கோடி செலவில் கல்விக்கு வெறும் 2.5% ஒதுக்கப்பட்டது. கல்வி குறிப்பாக உயர்கல்வியில் அதிக கவனமும் முதலீடும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் செய்ய வேண்டும் தற்போது உயர் கல்வியில் பெரும் பங்கு செலவு பெற்றோர்களாக இருந்து  செய்யப்படுகிறது என உரையாற்றினாா்.

விமான நிலையத்திற்கு அருகிலேயே விமானத்தை பார்க்கிங் செய்யவேண்டும் – மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

MUST READ