Homeசெய்திகள்சென்னை‘ஓசில ஜூஸ், ஆம்லெட்’ கேட்ட 4 போலீசார் இடைநீக்கம்

‘ஓசில ஜூஸ், ஆம்லெட்’ கேட்ட 4 போலீசார் இடைநீக்கம்

-

‘ஓசில ஜூஸ், ஆம்லெட்’ கேட்ட 4 போலீசார் இடைநீக்கம்

சென்னை அடுத்த படப்பை அருகே காசு இல்லாமல் ஜூஸ் கேட்டு தகராறில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

police

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஜூஸ் கடை ஒன்றில், பிரட் ஆம்லெட், சாக்லேட், ஜூஸ் போன்றவற்றை போலீசார் ஓசியில் கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியானது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், கடைக்காரரிடம் தகராறு செய்தவர்கள், கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் விஜயலட்சுமி, அவருடன் பணியாற்றும் ஜெயமாலா உள்ளிட்ட 4 பேர் என்பது தெரியவந்தது. 4 பேரும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது, டீக்கடையில் டீ குடித்துவிட்டு, அதற்கான பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, கடை உரிமத்தை ரத்து செய்துவிடுவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

Kanchipuram padapai 4 women police fight with shop owner 4 suspended Kanchipuram: ஓசியா ஜூஸ் வேணும்..! அட்ராசிட்டியில் ஈடுபட்ட 4 பெண் காவலர்கள்.. சிசிடிவி காட்சிகள் வெளியானதால் நடவடிக்கை..

இதுதொடர்பாக கடை உரிமையாளர் மணிமங்கலம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி உட்பட 4 போலீசாரை சஸ்பெண்ட் செய்து தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

MUST READ