spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதவறான வழியில் வாகனம் ஓட்டியதாக 5,667 வழக்குகள் பதிவு

தவறான வழியில் வாகனம் ஓட்டியதாக 5,667 வழக்குகள் பதிவு

-

- Advertisement -

தவறான வழியில் வாகனம் ஓட்டியதாக 5,667 வழக்குகள் பதிவு

கடந்த இரண்டு நாட்களில் ஒரு வழி பாதை மற்றும் தவறான பாதையில் வாகனம் ஓட்டியதாக 5,667 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அபராதம் செலுத்த தவறிய 1845 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

traffic police

வாகன ஓட்டிகள் தவறான பாதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுக்க செவ்வாய் (28.02.2023) மற்றும் புதன்கிழமை (01.03.2023) ஆகிய இரண்டு நாட்கள் போக்குவரத்து காவல்துறை சார்பில் சிறப்பு வாகன தணிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த தணிக்கை மூலம் மொத்தம் கடந்த இரண்டு நாட்களில் 5,667 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆன்லைன் கட்டண முறையில் ரூ.15,67,000/- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

we-r-hiring

தவறான பாதையில் வாகனம் ஓட்டி விதிமீறுபவர்களை தடுக்க, அவர்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அந்த இடத்திலேயே அபராதம் செலுத்தத் தவறினால், வாகனங்களை பறிமுதல் செய்யப்படுகின்றன. இதுப்போன்று 1,845 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்குண்டான அபராதத் தொகையை செலுத்திய பிறகு அவர்களது வாகனங்கள் விடுவிக்கப்படும். இதுபோன்று இந்த ஆண்டில் மட்டும், 68,629 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தவறான பாதையில் வாகனம் ஓட்டியதற்காக ரூ.1,53,37,500/- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. இது மாதிரி விதிமீறுபவர்கள் மீது இந்த சிறப்பு நடவடிக்கை எதிர்காலத்தில் தொடரும்.

MUST READ