spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைBMW கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

BMW கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

-

- Advertisement -

BMW கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் BMW கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Image

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் அருண் பாலாஜி இவருக்கு சொந்தமாக bmw சொகுசு கார் உள்ளது. இந்த நிலையில் காரின் ஓட்டுனர் பார்த்தசாரதி திருவல்லிக்கேணியில் இருந்து bmw சொகுசு காரில் தாம்பரத்திற்கு சென்று கொண்டுள்ளார். அப்போது குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியே வந்துள்ளது.

we-r-hiring

அப்போது காரை நடுரோட்டில் பார்த்தசாரதி நிறுத்தியுள்ளார். திடீரென காரில் தீப்பிடித்து. எரிந்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்தசாரதி காரில் இருந்து வெளியே குதித்துள்ளார். இதையடுத்து சொகுசு காரில் பிடித்த தீ மலமலவென எரியத் தொடங்கியுள்ளது. பின்னர் இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு துறைனருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி சொகுசு காரில் பற்றிய தீயை அணைத்தனர். ஆனால் சொகுசு கார் தீயில் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. இது குறித்து தாம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ