spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசலூன் கடையில் மாமுல் கேட்டு ஊழியரை பாக்ஸர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் ...

சலூன் கடையில் மாமுல் கேட்டு ஊழியரை பாக்ஸர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் A boxer assaulting staff at a salon

-

- Advertisement -

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆன சத்தியபாலன் என்பவர் அதே பகுதியில் பல ஆண்டுகளாக சலூன் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி சலூன் கடைக்குள் புகுந்த போதை ஆசாமி ஒருவர் மாமுல் கேட்டு ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மாமுல் தராததால் கோபமடைந்த போதை ஆசாமி கடையில் பணிபுரியக்கூடிய ராகேஷ் என்பவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

we-r-hiring
இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி சலூன் கடைக்குள் புகுந்த போதை ஆசாமி ஒருவர் மாமுல் கேட்டு ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்
போதை ஆசாமி

பின்னர் மிரட்டி விட்டு அருகில் இருக்கக்கூடிய டீக்கடையிலும் அந்த போதை ஆசாமி மாமுல் கேட்டு தகராறில் ஈடுபட்டு சென்றுள்ளார்.

தொடர்ச்சியாக அந்த நபர் மாமூல் கேட்டு தகராறு செய்து வந்ததால் சலூன் கடை உரிமையாளர் சத்திய பாலன் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் மாமுல் கேட்டு தகராறில் ஈடுபட்ட அந்த நபர் குறித்து விசாரணை நடத்திய போது அதே பகுதியை சேர்ந்த பாக்ஸர் பிரசாந்த் என்பதும், இவர் இந்த பகுதியில் உள்ள சிறு கடைகளில் மாமுல் கேட்டு தொடர்ந்து தகராறு ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பாக்சர் பிரசாந்த்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் பாக்சர் பிரசாந்த் சலூன் கடையில் வந்து மாமூல் கேட்டு ஊழியரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

MUST READ