தாம்பரம் அருகே திடீரென கார் தீ பற்றி எரிந்ததில் லேசான தீ காயத்துடன் காரில் பயணித்த தம்பதியினர் உயிர் தப்பினார்.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் ரங்கநாதன் தெருவில் இன்று காலை சைலோ (XYLO) காரில் கணவன் பாலமுருகன் (22) கார் ஓட்டி வந்தநிலையில் அவரது மனைவி அனுசுயா (20) அருகில் அமர்ந்து இருந்தார் அப்போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வருவதை கண்ட பாலமுருகன் காரில் இருந்து கீழே இறங்கிய சிறிது நேரத்தில் கார் தீபற்றி எரிய தொடங்கியது.

இதனால் அனுசுயா காரில் உள்ளே மாட்டிகொண்டதால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காரின் கதவை திறந்து உடனடியாக அனுசுயாவை மீட்டனர், அனுசுயா லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அனைத்தனர் இருப்பினும் காரின் முன்பக்கம் முற்றிலுமாக எரிந்து நாசமானது. மேலும் காயமடைந்த அனுசுயாவை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தெருவில் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீபற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


