முதியவர்களை குறி வைத்து வீடு வாடகைக்கு எடுத்து மோசடி செய்யும் பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி சிவா அரவிந்தன் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு.
பவானி(53) என்பவருக்கு சொந்தமான விருகம்பாக்கம் வெங்கடேசன் நகர் கம்பர் தெருவில் இருக்கும் வீட்டை ஒரு லட்ச ரூபாய் முன்பணம் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு எடுத்து, அந்த வீட்டை பதினாறு லட்ச ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டு மோசடி செய்துள்ளார்.

பவானி கொடுத்த புகாரில் விருகம்பாக்கம் போலீசார் சிவ அரவிந்தன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதேபோன்று, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராஜேந்திரன் என்பவரிடம் வீடு வாடகைக்கு எடுத்து, ஏழு லட்சம் ரூபாய்க்கு குத்தகை விட்டு மோசடி செய்த புகாரிலும், அடையாற்றில் லீனா பெர்னாண்டஸ் என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்து விவகாரத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லீனா பெர்னாண்டஸ் என்பவரை ஏமாற்றிய விவகாரத்தில் நீலாங்கரை போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் பாஜக நிர்வாகி சிவ அரவிந்தனை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

ஏ ஜி பிராப்பர்டி மேனேஜ்மெண்ட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி இந்த மோசடியை அரங்கேற்றி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வீடு வாடகைக்கு எடுத்து, குத்தகைக்கு விட்டு மோசடி செய்யும் பாஜக நிர்வாகி சிவா அரவிந்தன் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
எத்தனை, முதியவர்களிடம் இது போன்று மோசடி செய்துள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
