Homeசெய்திகள்சென்னைதமிழ்நாட்டில் முதல் முறையாக மிதக்கும் உணவக கப்பல்!

தமிழ்நாட்டில் முதல் முறையாக மிதக்கும் உணவக கப்பல்!

-

தமிழ்நாட்டில் முதல் முறையாக மிதக்கும் உணவக கப்பல்!

தமிழ்நாட்டில் முதல் முறையாக ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார்.

முட்டுக்காடு படகு குழாமில் சுற்றுலா பயணிகளை கவர கடலில் மிதக்கும் சொகுசு உணவக கப்பல்

செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாம் வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் கட்டுமான பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் சந்தரமோகன், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, அவர்கள்,
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அவர்கள், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் இருந்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவை படகுகள், இயந்திர படகுகள், வேகமான இயந்திர படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தர வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக
இந்த படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் பயணம் தொடங்கப்பட உள்ளது.

இந்த மிதக்கும் உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. முதல் தளம் திறந்த வெளி தளமாகவும், சுற்றுலா பயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கப்பலில் சமயலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை (மோட்டார் இன்ஜின்) அமைக்கப்பட உள்ளது. இந்த கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.

MUST READ