spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமருத்துவக் கல்லூரி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்

மருத்துவக் கல்லூரி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்

-

- Advertisement -

சென்னை கோடம்பாக்கத்தில் பத்தாவது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை செய்துக் கொண்டார்.

சடலத்தை கைப்பற்றி அசோக் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

we-r-hiring

சென்னை கோடம்பாக்கம், அம்பேத்கர் சாலை இல் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராமசுப்பு. ரயில்வேயில் AGMஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

தற்போது மெட்ரோ ரயில் அட்வைஸ்ராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.

இளைய மகள் நித்யஸ்ரீ (22) கே.கே நகரில் இ எஸ் ஐ மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்துள்ளார்.

இன்று காலை வீட்டில் அனைவரும் இருந்தனர். அப்போது திடீரென வெளியே சென்ற நித்யஸ்ரீ, பத்தாவது மாடி படிக்கட்டு ஜன்னலில் இருந்து கீழே குதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்துகுறித்து, தகவல் அறிந்த அங்கு சென்ற அசோக் நகர் போலீசார் உடலை கைப்பற்றி ஓமந்தூரார் அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

நித்யஸ்ரீ, ஒரு துண்டு சீட்டில் தானா எடுத்த முடிவு எனவும், எனக்கு கிடைத்த அப்பா அம்மா நல்லவர்கள் எனவும், கடிதம் எழுதி வைத்துவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் குறித்து அசோக் நகர் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

MUST READ