தென் சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணையில் இரண்டாவது நாளாக கால தாமதமாக பால் வண்டிகள் வெளியே சென்றதால் வாடிக்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்
சென்னை ஓ.எம்.ஆர் சாலை சோழிங்கநல்லூரில் இயங்கும் ஆவின் பால் பண்ணையில் நாள் தோரும் 5 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் பதப்படுதப்பட்டு, பாக்கெட்டுகளாக தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
அதிகாலை 3 மணிக்கு வாகனங்கள் வெளியேறினால் வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் பால் கிடைத்து விடும். நேற்று முன் தினம் இரவு தீடிர் என 25 க்கும் மேற்பட்ட புலம் பெயர் தொழிலாளர்கள் வேலைக்கு வராதததால் நேற்று காலை மிகவும் காலதாமதமாக பால் வினியோகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
ஆவின் நிர்வாகம் உரிய ஏற்படுகளுடன் இன்று செய்து இருந்தாலும் காலை 6 மணிக்கு மேல் தான் 5க்கும் மேற்பட்ட பால் லாரிகள் வெளியே சென்றுள்ளது. அதனால் வழக்கமாக ஏஜென்சிகளுக்கு செல்லும் ஆவின் பால் வாகனங்கள் இரண்டுமணி நேரம் காலதாமதம் ஆகியுள்ளதாக நிர்வாகத் தரப்பில் தெரிவித்தனர்.
இந்த ஆவின் பால் பண்ணையில் 100 நிரந்தர ஊழியர்களும், 150 ஒப்பந்த ஊழியர்களும் பணி செய்கிறார்கள். இதில் ஒப்பந்த ஊழியர்கள் பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்களாக இருப்பதால் இந்த பிரச்சனை ஏற்படுவதாக கூறப்படுகிறது.