spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் விபத்து ஒருவர் படுகாயம்

சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் விபத்து ஒருவர் படுகாயம்

-

- Advertisement -

சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கக்கூடிய பாலங்களில் ஒன்று.

we-r-hiring

இந்த மேம்பாலத்தில் நேற்று இரவு 10:30 மணி அளவில் இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனமானது தனது கட்டுப்பாட்டை இழந்தது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் இளைஞர் தனுஷ்(21) படுகாயம் அடைந்தார் எதிரே வந்த வாகன ஓட்டுநர் உட்பட மூன்று பேர் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர்.

படுகாயம் அடைந்த தனுசை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ