Homeசெய்திகள்சென்னைசென்னை தீவுத்திடலில் அமைக்கப்படுகிறது திறந்தவெளி திரையரங்கம்

சென்னை தீவுத்திடலில் அமைக்கப்படுகிறது திறந்தவெளி திரையரங்கம்

-

பொதுமக்களை ஈர்க்க சென்னை தீவுத்திடலில் புதிய திறந்தவெளி திரையரங்கு மற்றும் சுற்றுலா துறை உணவகம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி மாதத்தில் திறக்க வாய்ப்பு என அதிகாரிகள் தகவல்.

பொதுமக்களை ஈர்க்க சென்னை தீவுத்திடலில் புதிய திறந்தவெளி திரையரங்கு மற்றும் சுற்றுலா துறை உணவகம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி மாதத்தில் திறக்க வாய்ப்பு என அதிகாரிகள் தகவல்.
சென்னை தீவுத்திடல்

தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னை தீவுத்திடலில் கடந்த 1984 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உணவகம் மேம்படுத்தப்படாமலே இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் வரவு குறைந்து வருவாயும் குறைந்தன. இதையடுத்து தீவுத்திடல் உணவகத்தை மேம்படுத்தும் வகையிலும், பொதுமக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாற்றும் வகையிலும் புதிய முயற்சியாக திறந்தவெளி திரையரங்கு அமைக்க சுற்றுலாத்துறை முடிவு செய்தது.

இதற்காக நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை சார்பில் 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கிய நிலையில் தற்போது சுற்றுலாத்துறை சார்பில் செயல்பட்டு வந்த உணவகம் DRIVE – IN உணவகமாக நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள் தொடங்கின.

அதேபோல இளைஞர்கள் ஈர்க்கும் வகையில் புதிதாக COFFEE HOUSE மற்றும் BARBEQUE STATION ஆகிய சிறு ரக உணவகங்களும் அமைக்கப்பட்டுள்ளது. தீவுத்திடலில்

பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் காரில் அமர்ந்து கொண்டே காணும் OPEN AIR THEATRE  என அழைக்கப்படும் திறந்தவெளி திரையரங்கு அமைக்கும் பணியும் 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது.

பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் காரில் அமர்ந்து கொண்டே காணும் OPEN AIR THEATRE  என அழைக்கப்படும் திறந்தவெளி திரையரங்கு அமைக்கும் பணியும் 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது.
OPEN AIR THEATRE

இதில் கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை பொதுமக்கள் தங்கள் காரில் அமர்ந்தபடியே நேரலையாக கண்டு ரசிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் ஜனவரி மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும் எனவும்  அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

MUST READ