spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஅண்ணா பிறந்தநாள்- தமிழக அரசு சார்பில் மரியாதை

அண்ணா பிறந்தநாள்- தமிழக அரசு சார்பில் மரியாதை

-

- Advertisement -

அண்ணா பிறந்தநாள்- தமிழக அரசு சார்பில் மரியாதை

சென்னையில் பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாளையொட்டி அண்ணா சாலையில் உள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திரு உருவப்படத்திற்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Image

அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு,சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதே போல் அதிமுக சார்பில் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி,அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்,முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.மேலும் முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

we-r-hiring

Image

இதே போல் சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் அண்ணாசாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் செந்தமிழன் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் என்.ஆன்‌.தனபாலன் அண்ணா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Anna

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அண்ணாசாலையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு அதன் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

MUST READ