Homeசெய்திகள்சென்னைஎஸ்.ஏ கலை, அறிவியல் கல்லுாரியில் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு

எஸ்.ஏ கலை, அறிவியல் கல்லுாரியில் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு

-

எஸ்.ஏ கலை, அறிவியல் கல்லுாரியில் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு

எஸ்.ஏ கலை, அறிவியல் கல்லுாரியில் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு

சென்னை அடுத்த பூந்தமல்லி – ஆவடியில் சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்ஏ கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் இளம் வணிகவியல் கணக்கியல் மற்றும் நிதித்துறை சார்பில் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லுாரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லுாரி தாளாளர் ப. வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கினார். இயக்குநர் சாய் சத்யவதி, முதல்வர் மாலதி செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எஸ்.ஏ கலை, அறிவியல் கல்லுாரியில் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லயன் ஹேமலதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ராகிங் பற்றிய சட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னிட்டு ராகிங் எதிர்ப்பு பற்றிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவர்கள் மனிதச் சங்கிலியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ராகிங் பற்றிய நாட்டிய நாடக நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் 3ம் ஆண்டு மாணவன் விஜயதரன் எழுதி இயக்கிய குறும்படம் வெளியிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

MUST READ