Homeசெய்திகள்சென்னைசென்னை-கொல்கத்தா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை-கொல்கத்தா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

-

சென்னை-கொல்கத்தா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்திற்கு மர்ம நபர் இணையதளம் வாயிலாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை-கொல்கத்தா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

இதை அடுத்து சென்னையில் இருந்து கொல்கத்தா செல்ல இருந்த அந்த விமானத்தை நிறுத்தி வைத்து, வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு வெறும் புரளி என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து அந்த விமானம் சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாக இன்று காலை 11 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்திற்கு தொடர்ச்சியாக இதைப்போல் வெடிகுண்டு புரளியை கிளப்பி விடும் சமூக விரோத கும்பலை பிடிப்பதற்காக, சிறப்பு தனி படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை-கொல்கத்தா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் நிர்வாக அலுவலகம், சென்னை துறைப்பாக்கத்தில் உள்ளது. அந்த அலுவலகத்திற்கு இன்று காலை வந்த, ஒரு இணையதள தகவலில், சென்னையில் இருந்து இன்று காலை கொல்கத்தா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. விமானம் நடுவானில் பறக்கும் போது வெடித்து சிதறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது போன்ற ஒரு இணையதள மிரட்டல் தகவல், டெல்லியில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கும் இதே நேரத்தில் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் நிர்வாக அலுவலர்கள், உடனடியாக சென்னை விமான நிலைய இண்டிகோ ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு அவசர தகவல் கொடுத்தனர். அதோடு விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்கும் அவசர தகவல் அளிக்கப்பட்டது.

சென்னை-கொல்கத்தா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்த நிலையில் இன்று காலை 8.30 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, கொல்கத்தா செல்வதற்கான இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் 168 பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர். இதை அடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, அந்தப் பயணிகள் அனைவரையும் அவசர அவசரமாக விமானத்தில் இருந்து கீழே இறக்கினர். அதோடு பயணிகளை ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர்.

பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்ட பின்பு, அந்த காலி விமானம், இழுவை வண்டிகள் மூலமாக இழுத்துக் கொண்டு, விமான நிலையத்தின் ஒதுக்குப்புறமான, காலி இடத்தில் கொண்டு நிறுத்தப்பட்டது. அந்த விமானம் அருகே, வேறு விமானங்களோ மற்ற வாகனங்களோ நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

சென்னை-கொல்கத்தா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

இதற்கிடையே சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் குறிப்பாக, வெடிகுண்டு மிரட்டல்களை எதிர்கொள்ளும் சிறப்பு ஆலோசனை கமிட்டி அவசர கூட்டம் சென்னை விமான நிலையத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் விமானத்தையும் பயணிகளையும் பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டுகளை கண்டறிவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.

சென்னை-கொல்கத்தா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

விமானத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரிய வந்தது. ஆனாலும் அந்த விமானத்தை மீண்டும் வழக்கமான பகுதிக்கு கொண்டு வராமல், தனிமைப்படுத்தப்பட்டு விமான நிலையத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது மேலும் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு, இன்று மாலையில் இருந்து அந்த விமானம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே கொல்கத்தா செல்ல இருக்கும் 168 பயணிகளுக்கும், மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று காலை 11 மணிக்கு மேல், சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு இது சம்பந்தமாக சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்தப் புரளியை கிளப்பிவிட்ட மர்ம ஆசாமிகள் யார் என்று தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை-கொல்கத்தா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக இது போல தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் புரளி வந்து கொண்டு இருக்கின்றன. அதில் முதல் மிரட்டல், கடந்த 26 ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கும், மேலும் சென்னையில் உள்ள இரண்டு தனியார் நிறுவனங்களுக்கும் வந்தன.

அதில் ஒரு வாரத்தில் சென்னை விமான நிலையத்தில் குண்டுகள் வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஒரே மிரட்டல் இ மெயில் தகவல், 26 ஆம் தேதி ஞாயிறு அதிகாலை 3.30 மணிக்கும், அதன்பின்பு மீண்டும் காலை 9.40 மணிக்கும் தொடர்ந்து சென்னை விமான நிலைய இயக்குனர் தலைமையில் உயர் அதிகாரிகளின் அவசரக் ஆலோசனைக் கூட்டம் விமான நிலையத்தில் நடந்தது. அதோடு சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, கடந்த ஒரு வாரமாகவே சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு சோதனைகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

ஆனாலும் தினமும் இது போல வெடிகுண்டு மிரட்டல் புரளி தொடர்ந்து வந்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

https://www.apcnewstamil.com/news/chennai/bomb-threatening-to-chennai-airport/87620

இதை அடுத்து சென்னை விமான நிலையத்திற்கு இதைப்போல் தொடர்ச்சியாக வெடிகுண்டு புரளிகளை பரவ விடும் சமூக விரோத கும்பலை கண்டுபிடிப்பதற்காக சென்னை விமான நிலைய போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பிசிஏஎஸ் எனப்படும், விமான பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர்கள் இணைந்து சிறப்பு தனி படைகள் அமைத்து, வெடிகுண்டு புரளிகளை கிளப்பி விடும் சமூக விரோத கும்பலை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருப்பதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

MUST READ