- Advertisement -
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 11 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கும் நடப்பு ஆண்டு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நான் எக்ஸிகியூட்டிவ் பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியது முதல் கடந்த 11 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.