சென்னை மெட்ரோ இரயில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 78 நபர்களுக்கு மேலாண்மை இயக்குனர் மு. அ. சித்தக் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
சென்னை நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான மெட்ரோஸில் 74-வது குடியரசு தின விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதன்மை செயலாளர் மற்றும் மேலாண்மை இயக்குனருமான திரு. மு. அ. சித்திக் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.


பின்னர், குடியரசு தின விழாவை ஒட்டி சக ஊழியர்கள் இடையே விளையாட்டு திறனை ஊக்கவிப்பதற்காக மெட்ரோஸில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சுறுசுறுப்பான நடை, கேரம், ஸ்கிப்பிங் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 42 நபர்களுக்கும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணி புரியும் அலுவலர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் 7 நபர்களுக்கும் மற்றும் மெட்ரோஸில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற 29 நபர்கள் என ஆக மொத்தம் 78 நபர்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும் முதன்மைச் செயலாளருமான மு. அ. சித்திக் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர்கள் ராஜேஷ் சதுர்வேதி, டி. அர்ஜுனன் (திட்டங்கள்) டாக்டர் பிரசன்ன குமார் ஆச்சார்யா (நிதி), சென்னை ஒருங்கிணைந்த பெருநகர் போக்குவரத்து ஆணையத்தின் சிறப்பு அலுவலர் ஐ. ஜெயக்குமார், பொது ஆலோசனை அலுவலர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.


