Homeசெய்திகள்சென்னைசென்னை பெருநகர காவல் துறை சார்பில் தானியங்கி கேமரா தடுப்பு வேலிகள்

சென்னை பெருநகர காவல் துறை சார்பில் தானியங்கி கேமரா தடுப்பு வேலிகள்

-

- Advertisement -

சென்னை பெருநகர காவல் துறை சார்பில் தானியங்கி கேமரா தடுப்பு வேலிகள்

சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் சூரிய ஒளியில் செயல்படும் தானியங்கி கேமரா தடுப்பு வேலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை பெருநகர காவல் துறை சார்பில் தானியங்கி கேமரா தடுப்பு வேலிகள்

சென்னையில் பிரதான சாலைகளில் நடைபெறும் போக்குவரத்து விதிமுறை மீறல்களை கண்காணிக்கும் வகையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் சார்பில் ஏ.என்.பி.ஆர் (ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர்) என்கிற தானியங்கி கண்காணிப்பு கேமரா பேரி கார்ட் என்ற கேமராக்கள் முதல் கட்டமாக 5 வாங்கப்பட்டுள்ளன.

முக்கியசாலை சந்திப்புகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பைக் ரேஸ் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் நடைபெறும் வாகனங்களை சூரிய ஒளியிலான தானியங்கி கண்காணிப்பு கேமரா பதிவு செய்து வாகனத்தின் நம்பர் பிளேட்டுகளை ஸ்கேன் செய்து அந்த தகவல்களை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். அதன் பேரில் போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வகையில் சூரிய ஒளியிலான தானியங்கி கேமரா பேரி காட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

MUST READ