- Advertisement -
அட்சய திருதியைக்கு மத்தியில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை
அட்சய திருதியை முன்னிட்டு காலை 7.29 மணிக்கே தங்கத்தின் விலையை வணிகர்கள் மாற்றி அமைத்துள்ளனர். அட்சய திருதியை நாளில் தங்கம் விலை குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த ஆண்டுதான். விழாக்காலமான அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் தங்க விற்பனை அதிகரித்ததும் ஆர்பிஐ கொள்முதலில் இறங்கியதுமே தங்கத்தின் தேவை அதிகரித்ததற்கு காரணம் என தெரிகிறது.

இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.480 குறைந்து ரூ.44,840- க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ. 5,605-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி கிராம் ஒன்றுக்கு 90 காசுகள் குறைந்து ரூ.80.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ80,400க்கு விற்பனையாகிறது.