spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை-அமைச்சர் பெரியசாமி 

மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை-அமைச்சர் பெரியசாமி 

-

- Advertisement -

வெள்ளம் பாதித்த நான்கு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை-அமைச்சர் பெரியசாமி

மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை-அமைச்சர் பெரியசாமி 

சென்னை அடுத்த அயப்பாக்கத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் பெரியசாமி,மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.இதனை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அயப்பாக்கம் ஊராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அரிசி காய்கறி, பிரட்,பால் உள்ளிட்ட பொருட்களை வழங்கிய அமைச்சர்கள் அயப்பாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க சமைக்கப்பட்டு இருந்த உணவினை தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து அமைச்சர்கள் பெரியசாமி,மூர்த்த ஆகியோர் ஆய்வு செய்தனர்.அவருடன் வந்திருந்த எம்எல்ஏகள் கிருஷ்ணசாமி, கணபதி ஆகியோரும் மக்களுக்கு வழங்கப்பட இருந்த உணவை சாப்பிட்டு தரத்தை சோதனை செய்தனர்.

we-r-hiring

மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை-அமைச்சர் பெரியசாமி 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியசாமி நான்கு மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு குறைந்து விட்டதாகும், சுகாதாரப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வெள்ளம் பாதித்த நான்கு மாவட்டங்களிலும் திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை நீர் நிலைகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் தண்ணீர் வடிவ சற்று தாமதமானது என விளக்கம் அளித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் அனைத்து பிரச்சினைகளையும் முதலமைச்சர் ஆராய்ந்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை செய்து வருவதாகவும் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை-அமைச்சர் பெரியசாமி புயல் நிவாரணமாக ஒன்றிய அரசிடம் 5060 கோடி நிவாரணத் தொகை கேட்கப்பட்டிருந்தது. இது முதல் கட்ட பாதிப்பு குறித்து மட்டுமே நிவாரணத் தொகை கேட்கப்பட்டிருப்பதாகவும் முழு பாதிப்பு குறித்து ஒன்றிய அரசருக்கு அறிக்கை சமர்ப்பித்து அதற்கான நிவாரணத் தொகை ஒதுக்க தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

MUST READ