spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைரயிலில் முன்பதிவு செய்வதில் குளறுபடி! பயணிகள் எச்சரிக்கை

ரயிலில் முன்பதிவு செய்வதில் குளறுபடி! பயணிகள் எச்சரிக்கை

-

- Advertisement -

ரயிலில் முன்பதிவு செய்வதில் குளறுபடி! பயணிகள் எச்சரிக்கை

சீரடி செல்வதற்காக ஆன்லைனில் மூன்று மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்யப்பட்ட ரயில்வே டிக்கெட் ரயில் ஏறிய பிறகு திடீரென்று ரத்தானதால் 40 பயணிகள் அவதி.

we-r-hiring
ரயிலில் முன்பதிவு செய்வதில் குளறுபடி! பயணிகள் எச்சரிக்கை
ரயிலில் பயணிகள்

25 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்தும் இருக்கை இல்லாமல் பயணம் செய்தனர், ரயில்வே துறை, தனியார்  ஏஜென்சிகளுடன் மோசடியில் ஈடுபடுகிறதா என பயணிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் சீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்வதற்காக  கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து தங்கள் இருக்கைகளை உறுதி செய்துள்ளனர்

இதனை அடுத்து இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சீரடி செல்லக்கூடிய சாய் நகர் விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சுமார் 40 பேர் பயணம் செய்துள்ளனர். காட்பாடி ரயில் நிலையத்தில் ஏறிய ரயில் பயணிகள் சிலர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறி இது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் என்று கூறியுள்ளனர்

தாங்கள் ரயில் நிலையத்தில் RAC டிக்கெட் புக் செய்ததாகவும் இன்று காலை தங்களுக்கு உறுதி ஆனதாகவும் தெரிவித்துள்ளனர். அதற்கு தேவராஜ் நாங்கள் ஜனவரி மாதமே புக் செய்து டிக்கெட் உறுதி ஆகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்

ஆனால் இதை எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் என்று வாக்குவாதம் செய்து அடாவடியாக பர்த் இருக்கையில் பயணிகள் அமர்ந்துள்ளனர்.  இது குறித்து டிக்கெட் பரிசோதனையாரிடம் கேட்டபோது அவருக்கும் ஏதும் விளக்கம் தெரியாமல் குழப்பத்துடன் பதிலை சொல்லி நகர்ந்து விட்டுள்ளார்

ரயிலில் முன்பதிவு செய்வதில் குளறுபடி! பயணிகள் எச்சரிக்கை
Passenger

அப்போது ரயில் பயணி ஒருவர் இதுகுறித்து கேட்டு விசாரித்து போது ஆன்லைனில் நீங்கள் முன் பதிவு செய்ததால் ஆன்லைன் டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் 40 பேர்  இருக்க இடம் இல்லாமல் தவிர்த்து வருவதாக சமூக வலைத்தளங்களில் ரயில் பயணிகள் பதிவிட்டுள்ளனர்.

ஆன்லைன் டிக்கெட்டில் குளறுபடி ஏற்படுவதால் ஆன்லைன் டிக்கெட் நம்பி யாரும் பதிவு செய்ய வேண்டாம் என பதிவிட்டுள்ளனர். 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் செலவு செய்து ஆன்லைனில் டிக்கெட் புக் பதிவு செய்தும்  ரயிலில் இருக்கை இல்லாமல் தவிப்புடன் பயணம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ரயில்வே துறை இதைக் கண்டும் காணாதது போல் இருக்கிறதா இல்லை தனியார் ஏஜென்சிகளுடன் தொடர்பில் மோசடிபடுகிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

MUST READ