spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை வடபழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

சென்னை வடபழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

-

- Advertisement -

தைப்பூசத்தையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவிலில் முருகனை தரிசிக்க அலைமோதிய பக்தர்கள் கூட்டம். நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம், பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடும் நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூசம் எனப்படுகிறது.

we-r-hiring

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அறுபடை வீடு உட்பட அனைத்து முருகன் கோவிலிலும் விமர்சையாக கொண்டாடப்படும். இதன் தொடர்ச்சியாக சென்னை வடபழனி முருகன் கோயிலிலும்  தைபூசம் விழா சிறப்பு ஆர்ச்சனையுடன் கோலாலகமாக கொண்டாடப்பட்டது.

இன்றும் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர்.

கோயிலின் நுழைவு வாயிலில் இருந்து வடபழனி சிக்னல் வரை சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் மேலாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர்.

சென்னை மட்டுமின்றி சென்னை புறநகர் பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்னை வடபழனியில் குவிந்ததால் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Home

கண்காணிப்பு உயர் கோபுரம் மீது கண்காணித் காவலர்கள் திருட்டு கொள்ளை சம்பவங்கள் தடுப்பதற்கு சிசிடிவி அமைத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

MUST READ