செனாய் நகர் அம்மா அரங்கம் மற்றும் தி.நகர் சர்.பிட்டி தியாகராய அரங்கங்களை தனியாருக்கு குத்தகை விட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் செனாய் நகர் அம்மா அரங்கம் மற்றும் தி.நகர் சர்பிட்டி தியாகராய அரங்களில் ஏராளமான அரசு மற்றும் பல்வேறு தனியார் நிகழ்ச்சிகள் நடைபெறும். அம்மா அரங்கம் மற்றும் சர்.பிட்டி தியாகராய அரங்கங்களை பாரமாரிப்பதில் மாநகராட்சி மூலம் போதிய வருவாய் ஈட்டாத காரணத்தால் 5 ஆண்டுகளுக்கு தனியாருக்கு குத்தகை விட அனுமதி அளித்து வாடகையை மறு நிர்ணயம் செய்து தனியாருக்கு குத்தகை விட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்.

இதன் மூலம் செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கம் தற்போதைய வாடகை ரூபாய் 3.40 லட்சம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில தனியாருக்கு டெண்டர் விடப்பட்ட பின்னர் ரூபாய் 5.42 லட்சமாக வாடகை வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சர் பிட்டி தியாகராய அரங்கம் வாடகை 20 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு வரும் நிலையில் தனியாருக்கு டெண்டர் விடப்பட்ட பின்னர் உயர்த்தப்படும் வாடகை 50 ஆயிரம் ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி 9 ஆயிரம் என மொத்தம் – 59000 வாடகை நாள் ஒன்றுக்கு வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.