தமிழ்நாட்டில் பூஜை திருவிழா தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு.
மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம் விமானங்களில், பயணிகள் கூட்டம் அலைமோதுவதோடு விமான டிக்கெட் கட்டணங்கள் மூன்று மடங்குக்கு மேல் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
பூஜை திருவிழா தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கும், இல்லையேல் விடுமுறையை ஜாலியாக கழிப்பதற்கும், சுற்றுலா தளங்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கியுள்ளனர். கடைசி ரயில், நேரத்தில் ரயில் மற்றும் பேருந்துகளில் இடமில்லாதவர்களும் 3 நாட்கள் விடுமுறையில் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்து 2 நாட்களை பயண நாட்களாக கழிக்க மனம் இல்லாதவர்கள் பறந்து செல்லும் நோக்கத்துடன் விமானங்களில் பயணங்கள் மேற்கொள்கின்றனர்.
இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் ஆகிய நகரங்களுக்கு செல்லும், விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து விமான டிக்கெட் கட்டணங்களும் மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளது.
சென்னை- மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,200.
இன்றைய கட்டணம் ரூ.12,026 முதல் ரூ. 18,626 வரை
சென்னை- தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.5,006.
இன்று ரூ.11, 736 முதல் ரூ.13,626 வரை.
சென்னை- திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.2,382.
இன்று ரூ.5,456 முதல் ரூ.6,907 வரை.
சென்னை- கோவை கட்டணம் ரூ. 3,290.
இன்று ரூ.10,611 முதல் ரூ.10,996 வரை.
சென்னை- சேலம் கட்டணம் ரூ. 3,317.
இன்று கட்டணம் ரூ.10,792.
இதைப்போல் விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்தாலும் பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்கள் முன்பதிவு செய்வதால் விமானங்களில் அனைத்து இருக்கைகளும் வேகமாக நிரம்பி ஓரிரு இருக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. அதிலும் இன்றைய தினம் காலையில் செல்லும் விமானங்களை விட, மாலை மற்றும் இரவு நேரங்களில் செல்லும் விமானங்களில் டிக்கெட்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.
மூன்று நாட்கள் தொடர் விடுமுறை நாட்களை சொந்த ஊர்களில் இல்லையென்றால் சுற்றுலா தளங்களில் பொழுதை கழிக்கும் ஆர்வத்தில் பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு விமானங்களில் பயணம் செய்கின்றனர் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.