கடந்த வாரங்களில் பொங்கல் பண்டிகையின் தொடர் விடுமுறை தினத்தால் ஏராளமான மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்கு செல்லாததால் குறைந்த அளவு விசைப்படகுகளே மீன்பிடிக்க கடலுக்கு சென்றது.
இதனால் காசிமேட்டில் மீன் வரத்து குறைவாக உள்ளது. இதன் அடிப்படையில் கடந்த வாரத்தை விட மீன்களின் விலை இந்த வாரம் ஏற்றமாகவே உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களில் காசிமேடு மீன் விற்பனை சந்தையில் ஏராளமான மக்கள் மீன்களை வாங்குவது வழக்கம்.

விடுமுறை தினமான இன்று மீன்களை வாங்க அதிகாலை முதல் மக்கள் படையெடுத்த நிலையில், மீன்வரத்து குறைவால் மீன்களின் விலை உயர்ந்து இருந்த போதிலும் பேரம் பேசி வாங்கி சென்றனர்.
வஞ்சிரம் முழு மீன் கிலோ 700 வெட்டப்பட்ட மீன் கிலோ 950 ரூபாய்க்கும், வவ்வால் மீன் 800 ரூபாய்க்கும்,
பாறை மீன் 400 ரூபாய்க்கும்,
சங்கரா மீன் 400 ரூபாய்க்கும்,
கடல் விரால் 400 ரூபாய்க்கும்,
நெத்திலி 300 ரூபாய்க்கும், 
நாக்கு 550 ரூபாய்க்கும்,
கொடுவா 500 ரூபாய்க்கும்,
நண்டு 400 ரூபாய்க்கும்,
இறால் 300 ரூபாய்க்கும்,
கானகத்தை 300 ரூபாயாகவும்,
மயில் கோல 300 ரூபாய்க்கும்,
விற்பனை செய்யப்படுகின்றன.
சீனாவில் உணவு திருவிழா நடைபெற்றதால் இந்தியவிலிருந்து வஞ்சிரம் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி உடன் உணவுத் திருவிழா நிறைவு பெற்றதால் வஞ்சிரம் விலை சற்று குறைவாக விற்பனை செய்யப்படுகின்றன.


