(செப்டம்பர் 23) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை கிராமிற்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,500-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.84 ஆயிரத்தை தொட்டது இதுவே முதல்முறை, கடந்த சில நாட்களாகவே கடுமையாக விலை உயரந்து வரும் தங்கம் தொடர்ந்து அதிர்ச்சியளித்து வருகிறது.கடந்த 2 நாளில் மட்டும் தங்கம் விலை ரூ.1680 அதிகரித்துள்ளது.
அதே போல் தங்கம் விலை அதிக ஏற்றம் கண்டுள்ளதை போல் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்து. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.149-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,49,000-த்திற்கும் விற்பனையாகிறது.
பூந்தமல்லி – போரூர் இடையே இந்த ஆண்டு இறுதியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் – திட்ட இயக்குனர் தகவல்
