spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560  உயர்வு... வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 அதிகரிப்பு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560  உயர்வு… வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 அதிகரிப்பு

-

- Advertisement -

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, சவரன் ரூ.56,760க்கு விற்பனையாகிறது.

சென்னையில் கடந்த 2 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. நேற்று கிராம் தங்கம் ரூ.7,025க்கும், ஒரு சவரன் தங்கம ரூ.56,200க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்துள்ளது.

we-r-hiring

அட்சய திருதியை - தங்கம் விலை 2-வது முறை உயர்வு

சென்னையில் இன்று  காலை 22 கேரட் ஆபணரத்தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 56,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 70 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 7,095 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

சென்னையில் வெள்ளி விலை சில்லறை வர்த்தகத்தில் கிராமுக்கு 2 உயர்ந்து, ஒரு கிராம் 102 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல், பார் வெள்ளி கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

MUST READ