இன்றைய (நவ.1) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.97,000 தாண்டி விற்பனை செய்யப்பட்டது. தினமும் காலை, மாலை என இருவேளைகளில் தாறுமாறாக உயர்ந்து வந்நது. இதே வேகத்தில் சென்றால் சவரன் ரூ.1,00,000த்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்ட்ட நிலையில், தீபாவளிக்கு பின் அப்படியே தலைகீழ் மாறியது. ராக்கட் வேகத்தில் ஏறிய தங்கம் சறியத் தொடங்கயது. இந்த மாற்றம் நடுத்தர மக்களுக்கு சற்று நிம்மதியை தந்தது.
இனி தங்கம் படி படியாக குறையத் தொடங்கும் என்று எதிர் பார்த்த மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இதன்படி நேற்று முன்தினம் தங்கம் விலை குறைந்திருந்தது. அதே போன்று நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலை நீடித்தது. ஆனால் இன்று கிராமிற்கு ரூ.10 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.11,310க்கும், சவரனுக்கு ரூ.80 உயரந்து 1 சவரன் ரூ.90,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்லரை வர்த்தகத்தில் வெள்ளி விலை ககிராமுக்கு ரூ.1 உயர்ந்து 1 கிராம் ரூ.166க்கும், கிலோவிற்கு ரூ.1000 உயர்ந்து 1 கிலோ ரூ.1,66,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.


