Homeசெய்திகள்சென்னைவார இறுதி நாளில் அதிரடி ஏற்றம் கண்ட தங்கம் விலை..

வார இறுதி நாளில் அதிரடி ஏற்றம் கண்ட தங்கம் விலை..

-

- Advertisement -

கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, வார இறுதி நாளான இன்றும் அதிரடியாக ஏற்றம் கண்டுள்ளது.

தங்கம் விலை என்னதான் அதிரடியான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தாலும், தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கையும் அதற்கேற்ப அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. அந்தவகையில் சென்னையில் கடந்த 3 நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. தொடர்ந்து வார இறுதி நாளான இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ. 1,080 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,560க்கும் , கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,820க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் 60 காசுகள் உயர்ந்துள்ளது. அதன்படி சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி 99 ரூபாய் 30 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.99.300 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் இந்த விலையேற்றம் இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர வர்கத்தினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ