Homeசெய்திகள்சென்னைசென்னை மக்களுக்கு குட் நியூஸ்: பூந்தமல்லி - போரூர் - வடபழனி மெட்ரோ ரயில் சேவை...

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்: பூந்தமல்லி – போரூர் – வடபழனி மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடக்கம்! பட்ஜெட்டில் தவெக அரசு அறிவிப்பு!

-

- Advertisement -

தமிழகச் சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தமிழக நிதி அமைச்சர் மரியா வில்சன் இன்று தாக்கல் செய்தார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில், தலைநகர் சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்: பூந்தமல்லி - போரூர் - வடபழனி மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடக்கம்! பட்ஜெட்டில் தவெக அரசு அறிவிப்பு!

we-r-hiring

இதில், மேற்கு சென்னைப் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவான பூந்தமல்லி பைபாஸ் – போரூர் – வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை மிக விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் வெளியிட்டுள்ளார்.

மேற்கு சென்னை மக்களுக்கு விரைவுப் பயணம் – முக்கிய வழித்தடம்: பூந்தமல்லி பைபாஸில் தொடங்கி போரூர் வழியாக வடபழனியை இணைக்கும் இந்தச் சிறப்பு மெட்ரோ வழித்தடம், சென்னையின் மிக முக்கியப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாகும்.

விரைவில் திறப்பு, கட்டமைப்பு மற்றும் சோதனை ஓட்டப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், மக்கள் பயன்பாட்டிற்காக இந்த வழித்தடம் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி போரூர், வடபழனி மற்றும் பூந்தமல்லி ஆகிய பகுதிகள் எந்நேரமும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவும் பகுதிகளாகும்.

இந்த புதிய மெட்ரோ சேவை தொடங்குவதன் மூலம், ஐடி (IT) ஊழியர்கள், வணிகர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் பயண நேரத்தைக் கணிசமாகக் குறைக்க முடியும். மேலும், வடபழனி பேருந்து நிலையம் மற்றும் மெட்ரோ நிலையத்துடன் இணைப்பைப் பெறுவதால் தென் சென்னை மற்றும் மத்திய சென்னைப் பகுதிகளுக்கான பயணமும் எளிதாகும்.

பொதுமக்கள் மகிழ்ச்சி
மேற்கு சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த மெட்ரோ ரயில் சேவை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்ற பட்ஜெட் அறிவிப்பு, சென்னை வாசிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: சவரன் ரூ.1,06,880-க்கு விற்பனை – நகை பிரியர்கள் அதிர்ச்சி!

MUST READ