spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் பள்ளி அருகே குட்கா விற்ற கடைக்கு சீல்

சென்னையில் பள்ளி அருகே குட்கா விற்ற கடைக்கு சீல்

-

- Advertisement -

சென்னை வடபழனி, ஆற்காடு சாலையில் பெட்டி கடை நடத்தி வருபவர் ரகமதுல்லா (வயது46).

அரசு பள்ளி அருகே செயல்பட்டு வரும் இந்த கடையில் கடந்த அக்டோபர் மாதம் 2021ம் ஆண்டு உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை செய்தனர்.

we-r-hiring

அப்போது அங்கு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது இதையடுத்து ரகமதுல்லாவிற்கு  ரூபாய். 5000 அபராதம் விதித்தனர்.

ஆனால், ரகமதுல்லா தொடர்ந்து குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்து வருவது அடுத்தடுத்து உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் வடபழனி போலீசார் நடத்திய சோதனையில் தெரியவந்தது.

இதையடுத்து தொடர்ந்து அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் ரகமதுல்லா கடையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு உணவு பாதுகாப்பு துறை கமிஷனருக்கு வடபழனி போலீசார் கடிதம் அனுப்பினர்.

இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதாசிவம் தலைமையில் வந்த உணவு பாதுகாப்பு துறையினர் ரகமதுல்லாவின் கடையை பூட்டி சீல் வைத்தனர்.

MUST READ