வரும் ஜனவரி 26ம் தேதி இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார்.
இதனையொட்டி சென்னை, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காவல் துரை சார்பில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் அவர்களின் உத்தரவின் படி, சுமார் 6,800 காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் கொண்டு சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமானநிலையம், இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு உடனடியாக தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு காவல்துரை அதிகாரிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


