மாதவரம் , சாரங்கபாணி தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 40 ) இவர் ஐடி நிறுவனத்தில் மேலதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
அவரது மனைவி கவிப்பிரியா சென்னை மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இல்ல விழாவிற்கு வெளியே செல்ல இருந்த போது .கவிப்பிரியா பீரோவில் வைத்திருந்த நகையை எடுத்து அணிந்து கொள்ள பீரோவை திறந்து பார்த்தபோது நகைகளை காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அவர் இதுபற்றி தனது கணவரிடம் கூறியுள்ளார். பின்னர் வீடு முழுவதும் தேடி பார்த்ததில் நகைகள் கிடைக்கவில்லை. பீரோவில் இருந்த சுமார் 50 சவரன் காணாமல் போனது பற்றி உடனே மாதவரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு ,கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டின் பூட்டு உடைக்கப்படாத நிலையில் பீரோவில் வைத்திருந்த சுமார் 50 சவரன் நகைகள் திருடு போனது அவர்களின் உறவினர்கள் மற்றும் தினமும் வீட்டிற்கு வந்து செல்லும் நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிரான்ஸ் குளோபல் டவர் நிறுவனத்தின் – மேலாளர் வீட்டில் வருமான வரி சோதனை