சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூரில் டிரான்ஸ் குளோபல் பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .
சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள டிரான்ஸ் குளோபல் பவர் அலுவலகம் மற்றும் மதுரவாயல் ஆலப்பாக்கம் அலமேலு கல்யாண மண்டபம் எதிரே உள்ள,அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் டிரான்ஸ் குளோபல் டவர் நிறுவனத்தின் திட்ட மேலாளர் ராஜன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, ஆலப்பாக்கத்தில் உள்ள திட்ட மேலாளர் ராஜன் என்பவரது வீட்டில் 2 வாகனங்களில் 2 பெண் அதிகாரிகள் உட்பட 6 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில். உள்ள டிரான்ஸ் குளோபல் டவர் அலுவலகத்தில் 2 கார்ல் சென்ற 6 வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும்,ஆந்திர மாநிலம் நெல்லுரில் உள்ள டிரான்ஸ் குளோபல் டவர் அலுவலகத்திற்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, இந்த சோதனை , வரி ஏய்ப்பு தொடர்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தேவநாதன் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை – அமலாக்கத்துறை தகவல்