- Advertisement -
“தொழிலாளர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஒன்றிய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.அமெரிக்காவின் 50% வரியால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திப்பூரில் மட்டும் ரூ.3000 கோடி ஆயத்த ஆடை வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. அயிரக் கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய முதலமைச்சர், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் எனவும், தொழில்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கவும், அவர்களும் நிவாரணம் வழங்கவும் ஒன்றிய அரசை மீண்டும் வலியறுத்துகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.