- Advertisement -
ஒன்றிய அரசு வெளிவிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி நாட்டின் மொத்த உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் 15% பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம் என தெரிவித்துள்ளது.நாட்டிலேயே உற்பத்தித் துறையில் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை அளித்த பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்ட, 2023 -24ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தொழில் கணக்கெணடப்பு (ASI) முடிவுகளின்படி, இப்பட்டியலில் பெரிய மாறிலங்களான உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிராவை விட அதிக (15%) பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. அதேவேளை, குஜராத் 13%, மகாராஷ்டிரா 13%, உத்தரப் பிரதேசம் (8%), கர்நாடா (6%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தி மு கவின் தலைவராக எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் – செல்வப்பெருந்தகை வாழ்த்துகள்