சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் (Madras High Court Advocates Association – MHAA) தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று(15.12.2022) காலை தொடக்கியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் சங்கங்களில் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம். ஏறத்தாழ 17,000 வழக்கறிஞர்கள் உறுப்பினராக இச்சங்கத்தில் உள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சத்தியபால் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அப்போதைய நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு, தேர்தலில் போட்டியிடுவதற்கான மேலும் புதிய தகுதிகளை அறிவித்தது.
போட்டியிட ஐந்து ஆண்டுகளில் குறைந்தபட்சம் 200 வழக்குகளை நடத்தியிருக்க வேண்டும் போன்ற விதிகளை உருவாக்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் மற்றும் சிலர் உத்தரவை சீராய்வு செய்ய வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
சென்னை உயர்நீதிமன்றம் தடையை நீக்கி இதற்கு முன்பு உள்ள சட்ட விதிகளின் படி 2022 அக்டோபர் 14 தேதியில் தேர்தலை நடத்த தீர்ப்பளித்துள்ளது.

தற்போது தலைவர் பதவிக்கு ஜி.மோகனகிருஷ்ணன், எம்.வேல்முருகன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்வதாக அறிவித்துள்ளனர்.
ஜனவரி 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
4696 வழக்கறிஞர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது…
பதவிக்காலம் 2 ஆண்டுகள் முடிவடைந்த பிறகு தேர்தல் தொடர்பான வழக்குகள் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் இப்பொழுது மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது.


