- Advertisement -
சென்னை கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பராமரிப்பு பணிகளை இனி சென்னை மாநகராட்சியே மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1600 ஏக்கர் பரப்பளவு கொண்ட சென்னை கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் (SIDCO) வசமிருந்த சாலை, தெருவிளக்கு, வடிகால் பராமரிப்பு ஆகிய பணிகளை மாநகராட்சியே இனி மேற்கொள்ளும் என அறிவித்துள்ளனர்.