spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதங்கலான் படப்பிடிப்புக்காக சென்னை வந்த மாளவிகா!

தங்கலான் படப்பிடிப்புக்காக சென்னை வந்த மாளவிகா!

-

- Advertisement -

50% படப்பிடிப்பை நிறைவு செய்தது தங்கலான் படக்குழு! அடுத்த இரண்டு மாதங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்ய திட்டம்!

நடிகர் விக்ரம் மாறுபட்ட தோற்றத்தில், இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது. கோலார் தங்க வயிலை மையப்படுத்தி உருவாகி வரும் தங்கலான் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

we-r-hiring

இந்த படத்தில் விக்ரமுடன் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரிகிருஷ்ணன் உள்பட பலர் நடிக்கின்றனர்.

5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஆந்திரா, சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தங்கலானின் அடுத்து கட்ட  படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகை மாளவிகா மோகனன் சென்னை வந்துள்ளார். அவருடைய கதாபாத்திரத்துக்கான காட்சிகள் இங்கு படமாக்கப்பட உள்ளது.

Home

அடுத்தடுத்து இரண்டு மாதங்களில் சென்னை மற்றும் கோலார் தங்க வயலில் படத்தின் அனைத்து காட்சிகளும் எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக நடிகை மாளவிகா மோகன் சென்னை வந்துள்ளார்.

MUST READ