spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமுப்பெரும் விழா அல்ல; ஐம்பெரும் விழா- அன்பில் மகேஷ் புகழுரை…

முப்பெரும் விழா அல்ல; ஐம்பெரும் விழா- அன்பில் மகேஷ் புகழுரை…

-

- Advertisement -

மாணவர்களிடம் சாதிய உணர்வு பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் தலை எடுக்காமல் ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வதோடு சமத்துவம் சமூக நீதி தேவைகளை பற்றி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார்.முப்பெரும் விழா அல்ல; ஐம்பெரும் விழா- அன்பில் மகேஷ் புகழுரை…சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து, பயிற்சிக் கையேட்டினையும் வெளியிட்டார்.

மேலும், ரூ.277 கோடி மதிப்பீட்டில் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் 243 புதிய பள்ளிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்தார். அப்போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதலமைச்சர் அறிவுறுத்தல் படியும் வழிக்காட்டுதல் படியும் பள்ளிக்கல்விதுறை முன்னேறி வருகிறது. பெரியாரின் திருவுருவமாக முதல்வர்  திகழ்கிறார் என்றார். பள்ளிக்கல்விதுறைக்கு பல திட்டங்களை மாணவர்கள் நலனுக்காக கொடுத்து வருகிறார். கல்வியும் சுகாதாரமும் தனது இரு கண்கண் என முதல்வர் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். நிகழ்ச்சிக்கு வந்த அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் நான் வரவேற்கிறேன் என்றும், பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கிய இலக்கை தாண்டி நாங்கள் சென்று கொண்டு உள்ளோம். தமிழ் தேர்வில் 100 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு உதவிதொகையாக 10 ஆயிரமாக வழங்க உள்ளோம் என கூறினார். அதனால் இது முப்பெரும் விழா அல்ல; ஐம்பெரும் விழாவாக நடைபெற உள்ளது.

we-r-hiring

1996 ஆம் ஆண்டு தொடக்கபள்ளியின் எண்ணிக்கை தமிழகத்தில் 7 ஆயிரமாக இருந்தது அப்போது முதல்வராக கலைஞர் அவர்கள் இருந்தார். இதுவரை 9024 வகுப்பறைகளை காட்டியுள்ளோம். 2027-க்குள் 17,000 வகுப்பறைகளை கட்டி முடிப்போம். இதர கட்டிடங்களை நான் குறிப்பிடவில்லை எனவும் கூறினார்.

மேலும், ஏற்கெனவே தமிழகத்தில்  இருந்த அரசு ஒன்றிய அரசிடம் சென்று உரிமை குரல்களை  இழந்து, நாக்குகளை இழந்து, அரணாக இருக்க வேண்டிய கைகளை இழந்து இருக்கிறார்கள் எனவும் இனிமேல் தமிழ்நாட்டிற்கு பிரயோஜனம் படமாட்டார்கள் என்பதை ஒட்டுமொத்த  தமிழக மக்களும் உணர்ந்து உள்ளதாக பார்கிறேன். இங்கு அரசியல் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். அறிவு சார்ந்த மக்களிடம் அரசியல் சென்று சேர்ந்ததால் தான் நாட்டு  மக்களுக்கு அரசன் என்ன செய்கிறார் என தெரியும். பட்டதாரி ஆசிரியர்களே உங்களிடம் படிக்கும் மாணவர்களுக்கும் ஆறு மாதத்தில் பொது தேர்வு வந்துவிடும்; எங்களுக்கும் பொது தேர்தல் வந்துவிடும் நீங்களும் வெற்றி பெற வேண்டும்; நாங்களும் வெற்றி பெற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.

மேலும், இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர்கள்  கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சி.வி கணேசன், நாசர், மேயர் பிரியா உட்பட சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயர் அதிகாரிகள், பிற மாவட்டங்களில் இருந்தும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளும் பங்கேற்றனர்.

மேலக்கோட்டையூர், கண்டிகை பகுதியில் சிசிடிவி கேமரா போலீஸ் பூத் அமைக்க வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

MUST READ