spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை துறைமுகம் சார்பில் துறைமுகத்தலைவர் சுனில் பாலிவால் தேசிய கொடி ஏற்றினார்

சென்னை துறைமுகம் சார்பில் துறைமுகத்தலைவர் சுனில் பாலிவால் தேசிய கொடி ஏற்றினார்

-

- Advertisement -

74 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை துறைமுகம் சார்பில் துறைமுகத்தலைவர் சுனில் பாலிவால் தேசிய கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார்.

74 ஆம் ஆண்டு குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை துறைமுகம் சார்பில் புதுவண்ணாரப்பேட்டை துறைமுகம் குடியிருப்பு பகுதியில் பாபு ஜெகஜீவராமன் விளையாட்டு அரங்கில் கொடி ஏற்றப்பட்டது.

we-r-hiring

சென்னை துறைமுக ஆணையத் தலைவர் சுனில் பாலிவால் ஐஏஎஸ் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் மூவண்ணத் கலர் பலூன் மற்றும் வெள்ளை நிற சமாதான புறாவை வானில் பறக்க விட்டார்.

அதனைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஊக்கத்தொகையும் அதே போல் மாவட்ட அளவில் கேரம் விளையாட்டில், குத்துச்சண்டை, சிலம்பும் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் துறைமுக துணை தலைவர் பாலாஜி அருண்குமார் உள்பட துறைமுக அதிகாரிகள் துறைமுக ஊழியர்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

MUST READ