பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் நேமி நாத் நகர் பகுதியில் வசித்து வரும் காஜா முஹம்மது இவரது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். நிலையில் நேற்று வீட்டிலிருந்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தபோது இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வரும் நபர் வீட்டில் வளர்த்து வரும் நாய் திடீரென அந்த பெண்ணின் காலை கடித்து கீழே தள்ளி கையை கடித்து குதறியது. அலறிய சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மகளை கடித்த நாய் உரிமையாளர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் நேமி நாத் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது இந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் காஜா முஹம்மது இவரது மகள் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் நேற்று வீட்டிலிருந்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தபோது இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வரும் நபர் வீட்டில் வளர்த்து வரும் நாய் திடீரென அந்த பெண்ணின் காலை கடித்து கீழே தள்ளி கையை கடித்து குதறியது இதனால் வலியால் அலறிய சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் .

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது அதில் நாய் கடித்து குதறியதில் அந்த பெண்ணுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது இதையடுத்து அவரது தந்தை பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் தனது மகளை கடித்த நாயின் மீதும் நாயின் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் நாயின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர் குறிப்பாக இந்த பகுதியில் அதிக அளவில் நாய்கள் வளர்த்து வருவதாகவும் இதனால் குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாகவும் வீட்டை விட்டு வெளியே வருவதற்கும் அச்சம் அடைந்து வருவதாகவும் தினம்தோறும் இங்குள்ள நாய்கள் சிறுவர்கள் மற்றும் பொதுமக்களை கடித்து விடுவதாகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இங்கு வசியக்கூடிய சூழல் இருப்பதாகவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன் காரணமாக சிறுவர்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவில் மனைகளில் குடியிருந்து வரும் மக்கள் வாடகை உயர்வை கண்டித்து போராட்டம்
