மீஞ்சூர் கோவில் மனைகளில் குடியிருந்து வரும் மக்களுக்கு வாடகை உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம். கோவில் மனைகளில் குடியிருப்போருக்கு உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்து பட்டா வழங்கிட வலியுறுத்தல்.வட காஞ்சி என்று அழைக்கப்படும் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் ஆலயம் ஏகாம்பரநாதர் ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்த ஆலயங்களுக்கு சொந்தமான நிலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளைக் கட்டி வசித்து வருகின்றனர். கோவில் மனைகளில் வசித்து வருபவருக்கு அண்மையில் வாடகை உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்து உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் தலைமுறை தலைமுறையாக குடியிருந்து வரும் மக்களுக்கு பெயர் மாற்றம் செய்து தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். தலைமுறை தலைமுறையாக குடியிருந்து வரும் தங்களுக்கு பட்டா வழங்கிட அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் அப்போது கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த மு.க.ஸ்டாலின்! – இபிஎஸ்