spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசுற்றுச்சூழல் பாதிப்பு  நிறுவனங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சென்சார் கருவிகளை பொருத்த வேண்டும் - கலாநிதி வீராசாமி

சுற்றுச்சூழல் பாதிப்பு  நிறுவனங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சென்சார் கருவிகளை பொருத்த வேண்டும் – கலாநிதி வீராசாமி

-

- Advertisement -

சென்னை- எண்ணூர் அருகே உள்ள பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலைக்கு கப்பலில் இருந்து திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டதால் வடசென்னையைச் சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சுற்றுச்சூழல் பாதிப்பு  நிறுவனங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சென்சார் கருவிகளை பொருத்த வேண்டும் - கலாநிதி வீராசாமி

we-r-hiring

சென்னை திருவொற்றியூரில் ஆகாஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 42 நோயாளிகளை சிகிச்சை குறித்து மருத்துவரிடம் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளிடம் சந்தித்து தற்பொழுது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலாநிதி வீராசாமி, கோரமண்டல் கம்பெனியிலிருந்து வெளியேறிய அம்மோனியா வாயு கடலில் இருந்த குழாய் மூலம் வெளியேறியதால் நெட்டுக்குப்பம் தாழாங்குப்பம் பெரியகுப்பம் சின்ன குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் கண் எரிச்சல் மூச்சு திணறல் போன்ற பாதிப்புகளால் அவதிப்பட்டு மிகவும் பயந்து இருந்த நேரத்தில், திமுக நிர்வாகிகள் உடனடியாக சென்று பல்வேறு அரசு அதிகாரிகளையும் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் மக்களை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சுற்றுச்சூழல் பாதிப்பு  நிறுவனங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சென்சார் கருவிகளை பொருத்த வேண்டும் - கலாநிதி வீராசாமி

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் மருத்துவ சிசிக்சை பெற்று விரைவில் குணமடைய வேண்டும் மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள்மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள் தற்பொழுது சகஜ நிலைக்கு திரும்பி உள்ளார்கள். 42 பேர் ஆகாஷ் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  அரசு ஸ்டான்லிமருத்துவமனையில் ஆறு பேர் அனுமதிக்கப்பட்டு குழந்தைகள் இருவர் உட்பட ஆறு பேர் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் அவர்களும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் மருத்துவமனைக்கு வந்து அனைவரையும் பார்வையிட்டு, சிகிச்சைக்கான செலவுகள் அனைத்தும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற செயலாளர் சுப்ரியா சாகு இந்த கோரமண்டல் கம்பெனியை மூடுவதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்கள். மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மக்களுடைய கோரிக்கை ஏற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

சுற்றுச்சூழல் பாதிப்பு  நிறுவனங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சென்சார் கருவிகளை பொருத்த வேண்டும் - கலாநிதி வீராசாமி

வடசென்னையில் குறிப்பாக பெட்ரோல் நிறுவனங்கள் அதே போல் அமோனியா நிறுவனங்கள் உரத் தொழிற்சாலைகள் அதிகமாக பல நிறுவனங்கள் உள்ளன. ஏற்கனவே இங்கு ஒரு பிரச்சினை வந்தபோது மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரி முகாமிட்டு நிரந்தரமாக இருந்து பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளோம். இருந்தாலும் இது போன்ற துரதிஷ்டவசமாக சில நிகழ்ச்சிகள் நடைபெறும் போது மறுபடியும் இதுபோல் நடக்காமல் இருப்பதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

கடலில் போடப்பட்ட குழாயில் கூட ஐந்து மில்லி மீட்டர் அளவிற்கு துளை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். அது எதனால் ஏற்பட்டுள்ளது ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். 30 ஆண்டுகள் குழாய் அமைத்திருக்கும் நிலையில் அந்த குழாயை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதிப்பு  நிறுவனங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சென்சார் கருவிகளை பொருத்த வேண்டும் - கலாநிதி வீராசாமி

வடசென்னையில் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்ற நிறுவனங்கள் உள்ள நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிக அளவில் சென்சார் கருவிகளை பொருத்த வேண்டும், கடலில் நீரின் அளவில் எந்த அளவுக்கு மாசு கலந்து இருக்கிறது என்பதை குறித்து கருவிகளை பொருத்த வேண்டும், மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழா வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

MUST READ