Homeசெய்திகள்சென்னைகொளத்தூரில் நிவாரணப் பணிகள்  90 சதவீதம் நிறைவடைந்துள்ளது – அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்!

கொளத்தூரில் நிவாரணப் பணிகள்  90 சதவீதம் நிறைவடைந்துள்ளது – அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்!

-

கொளத்தூரில் நிவாரணப் பணிகள்  90 சதவீதம் நிறைவடைந்துள்ளது என  அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் தெரிவித்துள்ளார்.

72 மோட்டார் பம்புகளைக் கொண்டு நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து கொரட்டூர் பகுதியில் நடைபெறு வருகிறது எனவும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் முழுவதுமாக நீரை வெளியேற்றி விடுவோம் என அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் தெரிவித்துள்ளார்.

கொளத்தூரில் நிவாரணப் பணிகள்  90 சதவீதம் நிறைவடைந்துள்ளது – அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்!

அம்பத்தூர் பகுதியில் புயலின் தாக்கம் குறைந்தும் தற்போது வரை குடியிருப்பு பகுதிகளில் வழியாமல் நிற்கும் நீரை அகற்றி வரும் மாநகராட்சி அதிகாரிகள், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், 87 ஆவது வார்டு உறுப்பினர் பூர்ணிமா,83ஆவது வார்டு உறுப்பினர் நாகராஜ் மற்றும் அதிகாரிகள் களத்தில் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீர் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு நேரில் சென்று அவர்களின் குறைகளை கேட்டு, உதவிகளை செய்து, உணவுகளையும் வழங்கி பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

கொளத்தூரில் நிவாரணப் பணிகள்  90 சதவீதம் நிறைவடைந்துள்ளது – அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்!கொளத்தூர், கொளத்தூர்,

இதனை தொடர்ந்து பேசிய கொரட்டூர் பகுதியைச் சார்ந்த கோபாலன் கூறுகையில், “நான் கடந்த 41 ஆண்டு காலமாக கொரட்டூர் பகுதியில் வசித்து வருகிறேன். இதுவரை இதுபோன்ற மழையை  பார்த்ததில்லை. 2015இல் சந்தித்த மழை நீர் கொரட்டூர் ஏரியில் போய் சேர்ந்தது. ஆனால் தற்போது பட்டரவாக்கம், அயப்பாக்கம் ஏரிகளை உடைத்து விட்டு அங்குள்ள நீர் இப்பகுதியில் சூழ்ந்துள்ளதால் கடந்த நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம்.  தற்போது இரண்டு நாட்களாக திமுக கவுன்சிலர் உணவளித்து வருகிறார். மேலும் இந்த மழையின் காரணமாக இங்கு வசிக்கக்கூடிய 5000 மக்களின் வாழ்வாதாரம் பத்தாண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. தற்போது குடிநீர் ரூ.250, பால் பாக்கெட் ரூ.200, படகு ரூ.2500 என விற்பனையாகிறது. மேலும் வீட்டில் உள்ள பொருட்கள் டிவி ஃப்ரிட்ஜ் வாஷிங் மெஷின் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் அனைத்துமே பழுதடைந்த சூழ்நிலையில் உள்ளதாகவும் இதனால் தங்கள் வாழ்வாதாரம் 10ஆண்டுகள் மிகவும் பின்னோக்கி சென்றதாகவும் எனவே தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கு நிவாரணம் அளித்து உதவிட வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

கொளத்தூரில் நிவாரணப் பணிகள்  90 சதவீதம் நிறைவடைந்துள்ளது – அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்!

இதனைத் தொடர்ந்து அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் கூறுகையில், “வரலாறு காணாத மழை தற்போது பெய்துள்ளதால் கடந்த நான்கு நாட்களாக கொரட்டூர் சுரங்கப்பாதை முழுவதுமாக நீரால் சூழ்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து தேங்கியுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் இருப்பதால் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள நீரை வெளியேற்றும்படி கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்தார்.

கொளத்தூரில் நிவாரணப் பணிகள்  90 சதவீதம் நிறைவடைந்துள்ளது – அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்!

இறுதியாக அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் கூறுகையில், “இதுவரை 72 பம்புகள் கொண்டு அனைத்து வார்டுகளிலும் தொடர்ந்து நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது, 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும் அதிக அளவு கொரட்டூர் பகுதியில் நீர் சூழ்ந்துள்ளதால் இங்கு தொடர்ந்து நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது, நாளை நாளை மறுநாள் முழுவதுமாக நீரை வெளியேற்றுவோம். மேலும் உணவு தேவைப்படுபவருக்கு உணவுகளை தேடி கொடுத்து வருகிறோம்” என அவர் தெரிவித்தார்.

கொளத்தூரில் நிவாரணப் பணிகள்  90 சதவீதம் நிறைவடைந்துள்ளது – அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்!

 

MUST READ