Homeசெய்திகள்சென்னைஜாமின் கோரி நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுதாக்கல்

ஜாமின் கோரி நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுதாக்கல்

-

ஜாமின் கோரி நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுதாக்கல்

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி மனுதாக்கல் செய்துள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, ஜாமின் வேண்டி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த பிணை மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்றும், ஜாமின் மனுவை விசாரிக்க அதிகார வரம்புஇல்லை என்றும் சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனு, மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அப்போது உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் இந்த மனுவை விசாரிக்க முடியாது என சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு சென்றது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு, ஆகவே செந்தில்பாலாஜி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கும் மாற்றி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்பு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.

 

MUST READ