spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைகார்த்திகா, அபினேஷிற்கு ஊக்கத் தொகையை தலா ஒரு கோடியாக உயர்த்தி தர திருமாவளவன் வலியுறுத்தல்…

கார்த்திகா, அபினேஷிற்கு ஊக்கத் தொகையை தலா ஒரு கோடியாக உயர்த்தி தர திருமாவளவன் வலியுறுத்தல்…

-

- Advertisement -

ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற அபினேஷை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் அழைத்து பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினாா்.கார்த்திகா, அபினேஷிற்கு ஊக்கத் தொகையை தலா ஒரு கோடியாக உயர்த்தி தர திருமாவளவன் வலியுறுத்தல்…சென்னை வேளச்சேரியில் உள்ள விசிக அலுவலகத்தில், ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அபினேஷை சந்தித்து விசிக தலைவர் வாழ்த்து தெரிவித்து, அவரை ஊக்கப்படுத்தும் வகையில் ஊக்கத் தொகையாக 50 ஆயிரம் ரூபாயை வழங்கினார். அவரது பயிற்சியாளர் புவியரசிற்கு 10 ஆயிரம் ரூபாயை வழங்கி சிறப்பித்தார். மேன்மேலும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் விளையாடி பதக்கங்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.கார்த்திகா, அபினேஷிற்கு ஊக்கத் தொகையை தலா ஒரு கோடியாக உயர்த்தி தர திருமாவளவன் வலியுறுத்தல்…பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன் :- அபினேஷ் இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். அவரை பாராட்டுகிறோம், தந்தையை இழந்து எளிய குடும்ப பிண்ணனியில் இருந்து வந்தவர் அபினேஷ். அரசு கொடுத்த ஊக்கத்தொகையை கார்த்திகா, அபினேஷ் ஆகிய இருவருக்கும் 1 கோடி ரூபாயாக உயர்த்தி தரவும், இருவருக்கும் அரசு வேலை வாய்ப்பை உறுதி செய்யவும், வீடு ஒதுக்கீடு செய்யவும் முதல்வர் பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளாா்.

உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக, ரூ.18 இலட்சம் மோசடி..

MUST READ