spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக, ரூ.18 இலட்சம் மோசடி..

உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக, ரூ.18 இலட்சம் மோசடி..

-

- Advertisement -

காவல் துறையில் உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.18 இலட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு கைது செய்தனா்.உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக, ரூ.18 இலட்சம் மோசடி..சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் ரஞ்சித்குமார் என்பவர் 2017-ம் ஆண்டு காவல் துறையில் உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக கூறி, பல தவணைகளாக மொத்தம் ரூ 18,00,000/- பணம் பெற்றுக் கொண்டு போலியான பணி நியமன ஆணையை கொடுத்து ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட சீனிவாசன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 2025 ஆம் ஆண்டு புகார் கொடுத்ததின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இப்புகார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு ஆ.அருண், இ.கா.ப., உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர் திருமதி.ஏ.ராதிகா, இ.கா.ப அவர்கள் வழிகாட்டுதலின் பேரில், மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

we-r-hiring

விசாரணையில், நாவலூரைச் சேர்ந்த எதிரி ரஞ்சித்குமார் என்பவர் புகார்தாரர் சீனிவாசனிடம் 2017 ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 2017 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை பல தவணைகளாக வங்கி கணக்கு மூலமாகவும் நேரடியாகவும் என மொத்தம் ரூ.18 இலட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு போலியான பணி நியமன ஆணையை வழங்கி மோசடி செய்துள்ளதும், எதிரி ரஞ்சித்குமார் இது போல பல நபர்களிடம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளதும் தெரிய வந்தது.

அதன்பேரில், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணையிலும் மற்றும் பல இடங்களில் தேடுதலில் ஈடுபட்டு இவ்வழக்கில் தலைமறைவான ரஞ்சித்குமார்(39), த/பெ.கல்யாணசுந்தரம், நாவலூர், காஞ்சிபுரம் மாவட்டம் என்பவரை 27.10.2025 அன்று, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கைது செய்தனர். அவரிடமிருந்து போலியான பணி நியமன ஆணைகள், வங்கி பாஸ் புத்தகம் மற்றும் வழக்கிற்கு  தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட ரஞ்சித்குமார் விசாரணைக்கு பின்னர் நேற்று (28.10.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் துரித விசாரணை மேற்கொண்டு ரஞ்சித்குமாரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளா் வெகுவாகப் பாராட்டினார்.

சுமார் 3500 மீ உயரத்தில் சுவாமி தரிசனம் செய்த அண்ணாமலை…

MUST READ