கரூர் அருகே சுமார் 3500 மீ உயரம் உள்ள ரெங்கமலையில் நண்பர்களுடன் ஏறி அருள்மிகு மல்லீஸ்வரரை பாஜக தேசிய பொதுகுழு உறுப்பினர் அண்ணாமலை தரிசனம் செய்தாா்.
கரூர், திண்டுக்கல் மாவட்ட எல்லையில், கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ரெங்கமலை உள்ளது. சுமார் 3500 அடி உயரம் கொண்ட இந்த மலையில் அருள்மிகு மல்லீஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. பாண்டியர் காலத்தைச் சார்ந்த பழமையான இக்கோவிலை தரிசனம் செய்ய நடந்து மலை மீது ஏறிச் செல்வதை பலரும் விரும்பி செல்கின்றனர்.
இந்நிலையில் பாஜக தேசிய குழு உறுப்பினர் அண்ணாமலை தனது நண்பர்களுடன் மலையேறி சென்று மல்லீஸ்வரரை தரிசனம் செய்து திரும்பியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
பணி நியமன ஆணை வழங்குவதில் முறைகேடு உரிய விசாரணை மேற்கொள்ள டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்…



