சென்னை நகரில் மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து நகரின் முக்கிய இடங்களுக்கு பயணிகளை எளிதாக இணைக்கும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (MTC) புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் மக்கள் தங்கள் இறுதி இலக்கை எளிதாக அடைய வசதியாக, குளிர்சாதன (ஏசி) மினி பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதன் மூலம் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகள், வர்த்தக மையங்கள் மற்றும் அலுவலகப் பகுதிகளுக்கும் இடையிலா இணைப்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக, ஒப்பந்த அடிப்படையில் 220 ஏசி மினி பேருந்துகளை இயக்குவதற்காக போக்குவரத்து கழகம் டெண்டர் கோரியுள்ளது. இப்பேருந்துகள், தற்போது இயங்கி வரும் சாதாரண மற்றும் மினி பேருந்து சேவைகளுக்கு கூடுதலாக இணைக்கப்படவுள்ளன.
மெட்ரோ ரயில் சேவைக்கு மக்கள் அளித்து வரும் சிறப்பான வரவேற்பைத் தொடர்ந்து, பயணிகளின் “இறுதி மைல்” இணைப்பை (last-mile connectivity) வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பயண நேரத்தை குறைப்பதோடு, பொதுப் போக்குவரத்தின் மீது மக்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில், மெட்ரோ மற்றும் பேருந்து இணைப்பு சேவைகள் மூலம் சென்னையின் நகரப்போக்குவரத்து வசதி மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணி நியமன ஆணை வழங்குவதில் முறைகேடு உரிய விசாரணை மேற்கொள்ள டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்…


